Wednesday, April 30, 2014

ஆடாநிலை

 சற்றே நிறுத்தி  வைக்கிறாள் கிழவி

பாக்கு இடிப்பதை!

தாயோ மின்னணு சாதனங்கள்

எதையும்  இயக்குவதில்லை.

முற்றத்தில் காக்கைகள் கூட

மௌனம் சாதிக்கின்றன.

வீடு எங்கும் மௌனம்

நிரம்பி வழிகிறது.

பால்காரன் 'அம்மா' பால்

என்று கத்துவதில்லை.

கொல்லையில்  கால்நடைகளும்

ஓசையில்லாமல் அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன.

பகல் பத்தேகால் மணிப்  பேருந்தும்

ஒலி எழுப்பாமலேயே செல்கிறது.

அனைவரும் தெரிந்தே வைத்திருக்கின்றனர்

உன்னைச் சுமந்த தொட்டில்

ஆடாநிலை பெற்றிருக்குமென்று !!

இது நீ உறங்கும் பொழுதென்று !


No comments:

Post a Comment