Monday, March 17, 2014

ஒலி Vs ஒளி



பிம்பங்கள் ஒன்றொன்டாய் தோன்றி மறைந்தன
முதல் பிம்பம் அவனைப் பார்த்து சிரித்தது
இரண்டாவது அவனை வாழ்த்தியது
மூன்றாவது வசை பாடியது
நான்காவது மகிழ்ச்சியில் துள்ளியது
யார்? யாரது? யாராக இருக்க முடியும் ?

ஏற்கனவே கீழ்வானில் விடிவெள்ளியும் முளைத்தாயிற்று
 காற்றில் சல்லாபித்த  கண்ணாடியில் பிரதிபலித்த
நிலவின் கிரணங்கள்
அறையின் ஒவ்வொரு மூலையிலும்
ஒரு 'ஒளி' ஓவியத்தை தீட்டி கொண்டிருந்தது !

ஓ! இவை ஏற்படுத்திய  விசித்திர உணர்வுகளா
என்று யோசிப்பதற்குள்...
பலத்த ஓசை கேட்டது.
உடனே ஆயிரம் பிம்மங்கள்
மின்னல் ஒளி பட்டு ஜனித்த
கண்ணாடியின் ஒவ்வொரு துகள்களும்
பிறந்ததும்  நீந்தும் மீன் குஞ்சு போல
தங்கள் உழைப்பை  உடனே சிந்தியதின் விளைவு !

கூடவே ஒரு அகோர ஒலி
அந்த வீடே அதிரும்படி கேட்டது.
வெளியில் வாசல் தெளிக்கும் கண்ணம்மாவுக்கு
மட்டுமே தெரியும் அது
அந்த வீட்டு எஜமானரின் குறட்டைச் சத்தம் என்று !

பாவம்  விடிந்தும் தெளியவில்லை அவர் 
கனவு மட்டும்  
பிம்பங்கள் ஒன்றொன்டாய் தோன்றி மறைந்துக்கொண்டே இருந்தன!



No comments:

Post a Comment