இந்த பயணம் சாத்தியமா?
யோசிக்கிறது? இருந்தும்
நில்லாமல் தொடர்கிறது.
அதனிடம் வழிகாட்டும் வரைபடமும் இல்லை
அதற்கு வழிகாட்டவும் யாருமில்லை
அதன் ஒரே குறிக்கோள்
தொடர்ந்த ஓட்டம் மட்டுமே.
வெய்யிலோ புயலோ அது அஞ்சுவதில்லை
மழை என்றாலோ அது பிரித்துப்பார்பதில்லை
நிலை மாறினாலும்
அது தன் பயணத்தை நிறுத்துவதில்லை.
பாதையில் வரும் எவரும் கட்டாயப் பயணியே
நிறம்,மணம்,திசை மாற்றலாம்
விலக மறுத்தால் உருமாறி இடமாறலாம்
நாணலானால் நளினமாய் தவிர்க்கலாம்.
இறுதியில் கடலில் சேரத்தான் வேண்டும்
அதற்குள் எதை மாற்ற முடியுமோ
அதை மாற்றுவோம் முடியாததை ஏற்போம்.
நீங்கள் எதை மாற்ற போகிறீர்கள்?!!!
யோசிக்கிறது? இருந்தும்
அதனிடம் வழிகாட்டும் வரைபடமும் இல்லை
அதற்கு வழிகாட்டவும் யாருமில்லை
அதன் ஒரே குறிக்கோள்
தொடர்ந்த ஓட்டம் மட்டுமே.
வெய்யிலோ புயலோ அது அஞ்சுவதில்லை
மழை என்றாலோ அது பிரித்துப்பார்பதில்லை
நிலை மாறினாலும்
அது தன் பயணத்தை நிறுத்துவதில்லை.
பாதையில் வரும் எவரும் கட்டாயப் பயணியே
நிறம்,மணம்,திசை மாற்றலாம்
விலக மறுத்தால் உருமாறி இடமாறலாம்
நாணலானால் நளினமாய் தவிர்க்கலாம்.
இறுதியில் கடலில் சேரத்தான் வேண்டும்
அதற்குள் எதை மாற்ற முடியுமோ
அதை மாற்றுவோம் முடியாததை ஏற்போம்.
நீங்கள் எதை மாற்ற போகிறீர்கள்?!!!

No comments:
Post a Comment