மௌனத்தின் ஆட்சி
மெல்ல விரிகிறது
நீண்டு நீண்டு
அந்த அறையெங்கும்
அந்த வீடு எங்கும் பரவுகிறது
அதன் ஒவ்வொரு நீட்சியிலும்
ஒரு சில மனிதர்களை வெற்றி கொண்டு
அவர்களையும் மௌனியாக்கி விடுகிறது
அவர்களையும் மௌனியாக்கி விடுகிறது
அதற்கு சாட்சியாக ஒரு தீபம் மட்டும்
ஆடாமல் அசராமல்
ஆடாமல் அசராமல்
அந்த வீட்டின் கூடத்தில்
அவனது புகைப்படத்தின் அருகில் சுடர்விட்டு கொண்டிருந்தது.

No comments:
Post a Comment