Thursday, February 27, 2014

கடவுளுக்கு ஒரு பெண்ணின் கடிதம் !

நன்றிகள் பல இறைவா 
நான் இன்று
பத்திரமாக வீட்டை
அடைந்தேன்!

இந்த இரவு
என்னை ஒன்றும்
 செய்துவிடவில்லை
மகிழ்ச்சி !

நாளை எப்படி ?!!
என்னை நீ
பாதுகாப்பாய்  என்று
நம்பலாமா!

பாவம் நீ ?
எத்தனை பெண்களை 
மனிதம் தொலைத்தவர்களிடமிருந்து 
காப்பாற்றுவாய் !

நான்  'கராத்தே '
கற்றுக் கொள்ளவா ?
இல்லை மிளகாய்ப்பொடி கைவசம்
வைத்திருக்கவா?

கூடவே  எனக்கு பிடிக்காத
புதுமையற்ற
 சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளைமட்டும்
அணியவா?

இவைகளைத் தானே
தில்லிச் சகோதரியும் அந்த
கணிப்பொறியாளினியும் செய்தார்கள்?
என்ன ஆனார்கள்?

மனிதம் உள்ளவர்கள்  மட்டும் 
இந்த மண்ணில் வாழ
வழிசெய் !!!!
மனிதம் செழிக்கும்! வாழ்வு சிறக்கும்!







No comments:

Post a Comment