Tuesday, February 11, 2014

அந்த அறையில் ! (சற்றே சிறிய கதை !)


அந்த அறையில்
அவளைத்தவிர யாருமில்லை.
அங்கிருந்த பொருட்கள்
பெரும்பாலும் மின் உபகரணங்களே. 
மூலையில் ஒரு வெள்ளை
திரவம் கொதித்துக் கொண்டிருந்தது
அதை எடுத்து ஒரு
குடுவையில் ஊற்றினாள்.
திரும்பிப் பார்த்தாள் 
சுற்றிலும் அலமாரிகள்
ஒவ்வொரு அடுக்குகளிலும்  
பல வண்ணங்களில் ஜாடிகள் 
ஒவ்வொன்றிலும் ஏதோ வஸ்துக்கள். 
மணி  பதினொன்று அடித்தது. 
இன்னும் யாரும் வரவில்லை
என்பதை உறுதி செய்து கொண்டாள். 
ஏனோ அந்த நீல ஜாடி 
கண்ணைப் பறித்தது 
அதை எடுத்தாள் அதிலிருந்து சிறிது 
வெள்ளை ஸ்படிகங்களை குடுவையில் போட்டாள்.  
மீண்டும் ஏதோ தேடினாள் 
இப்போது அகப்பட்டது மூவர்ண ஜாடி ஒன்று 
அதிலிருந்தது பழுப்புநிறத் தூள் 
அதை மூன்று மேசைக்கரண்டி சேர்த்தாள்
அழைப்பு மணி ஒலித்தது 
சுதாரித்துக் கொண்டு பாபுவா என்றாள் 
ஆமாம் என்று பதில் வந்தது 
வேகவேகமாக குடுவையை மூடினாள் 
ஜன்னல் வழியே கொடுத்தாள் 
மூன்று பேருக்கு இருக்கு நல்லா கலந்து 
குடிங்க காப்பியை என்றாள் !

No comments:

Post a Comment