இரவின் மடியில்
உணர்வுகளின் பொய் தூக்கம்
துணையை கண்டவுடன்
பரவசம் கொண்டு எழும்.
மனம் விரும்பும்
வார்த்தைகள் மட்டுமே பேசும்
விளையாட எண்ணி
பொய் கோபம் கொள்ளும்.
சில நொடிகளில்
அதுவே காணாமல் போகும்
மதிமயங்கி மனம்நெருங்கி
ஸ்வாரஸ்யம் கூடும்.
எல்லையில்லா ஆனந்தம்
ஆரம்பம் ஆகும்
இரவுகள் உணர்வுகளின்
விளையாட்டு கூடம்
முடிவில்லா ஆட்டம்
விடிய விடிய அரங்கேறும்.
உணர்வுகளின் பொய் தூக்கம்
துணையை கண்டவுடன்
பரவசம் கொண்டு எழும்.
மனம் விரும்பும்
வார்த்தைகள் மட்டுமே பேசும்
விளையாட எண்ணி
பொய் கோபம் கொள்ளும்.
சில நொடிகளில்
அதுவே காணாமல் போகும்
மதிமயங்கி மனம்நெருங்கி
ஸ்வாரஸ்யம் கூடும்.
எல்லையில்லா ஆனந்தம்
ஆரம்பம் ஆகும்
இரவுகள் உணர்வுகளின்
விளையாட்டு கூடம்
முடிவில்லா ஆட்டம்
விடிய விடிய அரங்கேறும்.
No comments:
Post a Comment