உன்னை அறிய முற்பட்ட
பொழுதுகள் இனிமையானவை!
முதன் முதலாய் உன்னை
பார்த்தது எப்போது? எங்கே?
என் நினைவு ஊஞ்சல்
பின்னோக்கி நகர்கிறது
தனியறையில் மிக நெருக்கத்தில்
ஒரு பெண்ணொருத்தி பகிர்ந்தாள்
உன் இருப்பை ! வேறு அடையாளங்களையோ
புகைப்படத்தையோ அவள் தரவில்லை.
காத்திருக்க வேண்டும் உன்னைக் காண
என்று மட்டுமே சொன்னாள்
நாட்கள் பல உருண்டோடியது
என் ஆவல் கூடிக்கொண்டே போனது
நீ எப்படி இருப்பாய்! - உன்
ஸ்பரிசம் எப்படி இருக்கும் என்று.
கூடவே முன் எப்போதுமில்லாதொரு பயம்
நீ என்னை ஏற்பாயா?!
திடீரென்று என் தொலைபேசி அலறியது
குறிப்பிட்ட முகவரிக்கு வரசொல்லிற்று.
அங்கு நீயும் அந்தப் பெண்ணும்
ஒரே கட்டிலில் !
உன்னை பிரசவித்த களைப்பில் என்
மனைவி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்.
பொழுதுகள் இனிமையானவை!
முதன் முதலாய் உன்னை
பார்த்தது எப்போது? எங்கே?
என் நினைவு ஊஞ்சல்
பின்னோக்கி நகர்கிறது
தனியறையில் மிக நெருக்கத்தில்
ஒரு பெண்ணொருத்தி பகிர்ந்தாள்
உன் இருப்பை ! வேறு அடையாளங்களையோ
புகைப்படத்தையோ அவள் தரவில்லை.
காத்திருக்க வேண்டும் உன்னைக் காண
என்று மட்டுமே சொன்னாள்
நாட்கள் பல உருண்டோடியது
என் ஆவல் கூடிக்கொண்டே போனது
நீ எப்படி இருப்பாய்! - உன்
ஸ்பரிசம் எப்படி இருக்கும் என்று.
கூடவே முன் எப்போதுமில்லாதொரு பயம்
நீ என்னை ஏற்பாயா?!
திடீரென்று என் தொலைபேசி அலறியது
குறிப்பிட்ட முகவரிக்கு வரசொல்லிற்று.
அங்கு நீயும் அந்தப் பெண்ணும்
ஒரே கட்டிலில் !
உன்னை பிரசவித்த களைப்பில் என்
மனைவி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்.
No comments:
Post a Comment