Wednesday, February 5, 2014

அப்படியே ! அப்படியே !



தூண்ட எரியுமாம் விளக்கு

சுடர்  அறிவும் அப்படியே !

பகிரப்பழக  விரியுமாம் நட்பு

பல உறவும் அப்படியே !

                                        தேய்ந்து வளருமாம் நிலா

                                        உன் நினைவுகளும் அப்படியே !

                                         (நீ )தீண்ட மலருமாம் முகம்

                                        உன் மென்னசைவுகளிலும்  அப்படியே !


(நீ )உறங்க உருகுமாம் உள்ளம்

உன்  அபஸ்வரங்களிலும் அப்படியே !

(நீ) அணைக்க  நிறையுமாம் நெஞ்சம்

உன் மழலையிலும் அப்படியே !



No comments:

Post a Comment