Wednesday, October 29, 2014

யார் அவன்

என் ஜன்னலுக்கு வெளியே

பல நிகழ்வுகள்

காலை முதல் மாலை வரை

மாறும் காட்சிகள்

அந்த ஒரு விடுமுறை நாளில்

ஜன்னல் திறந்தே கிடந்தது

யாரும் அறியா வேளையில்

எவனோ ஒருவன்  பிரவேசித்தான்

நான் தான்  ராஜா  என்றான்

நீ தான் ராணி என்றான்

அவன் வேறு யாருமில்லை

அருகில் புதிதாய் குடிவந்த சிறுவன்

அன்று முதல் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.




Monday, October 20, 2014

இயற்கை ஒரு கண்ணாடி

நிரம்பி வழிகிறது
விவசாயிகளின் உள்ளம்
தொடர் மழையால்

கூடவே...
குழந்தைகளின் மனம்
தொடர் விடுமுறையால்

மேலும்
உறவினர்களின்  இல்லம்
தொடர் வருகையால்

இயற்கை என்றும் மனிதனின்
உணர்வுகளை
பிரதிபலிக்கும் கண்ணாடி!!


Is nature a mirror?
It keeps reflecting how does one feel!
Is nature a mirror?
It changes ; one's mood also changes!
Is nature a mirror?
It displays one to self;also the world to self!
Is nature a mirror?
It never forfeits;unless you are against it!
Is nature a mirror?
It presents numerous opportunities(images)!
Is nature a mirror?







Wednesday, October 8, 2014

இரவின் மடியில்

இரவின் மடியில்

   உணர்வுகளின் பொய் தூக்கம்

துணையை  கண்டவுடன்
 
   பரவசம் கொண்டு எழும்.

மனம் விரும்பும்

  வார்த்தைகள் மட்டுமே பேசும்

விளையாட  எண்ணி
 
பொய்  கோபம் கொள்ளும்.

சில நொடிகளில்
 
 அதுவே காணாமல் போகும்

மதிமயங்கி மனம்நெருங்கி

 ஸ்வாரஸ்யம்  கூடும்.

எல்லையில்லா ஆனந்தம்

 ஆரம்பம் ஆகும்

இரவுகள் உணர்வுகளின்

 விளையாட்டு  கூடம்

முடிவில்லா ஆட்டம்

 விடிய விடிய அரங்கேறும்.

Sunday, October 5, 2014

முதல் சந்திப்பு

உன்னை அறிய முற்பட்ட
பொழுதுகள் இனிமையானவை!

முதன் முதலாய்  உன்னை
பார்த்தது எப்போது? எங்கே?

என் நினைவு ஊஞ்சல்
பின்னோக்கி  நகர்கிறது

தனியறையில் மிக நெருக்கத்தில்
ஒரு பெண்ணொருத்தி  பகிர்ந்தாள்

உன் இருப்பை ! வேறு அடையாளங்களையோ
புகைப்படத்தையோ அவள் தரவில்லை.

காத்திருக்க வேண்டும் உன்னைக் காண
என்று மட்டுமே சொன்னாள்

நாட்கள்  பல உருண்டோடியது
என் ஆவல் கூடிக்கொண்டே போனது

நீ எப்படி இருப்பாய்! - உன்
ஸ்பரிசம்  எப்படி இருக்கும் என்று.

கூடவே முன் எப்போதுமில்லாதொரு பயம்
நீ  என்னை ஏற்பாயா?!

திடீரென்று  என் தொலைபேசி அலறியது
குறிப்பிட்ட முகவரிக்கு வரசொல்லிற்று.

அங்கு நீயும் அந்தப்  பெண்ணும்
ஒரே  கட்டிலில் !

உன்னை பிரசவித்த களைப்பில் என்
மனைவி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்.










Thursday, October 2, 2014

சில நேரம்

சில நேரம்
தொலைந்து போகிறோம் - நாம்
நம்மை அறியாமலேயே
அதிலிருந்து மீண்டு வருவதற்குள்
இவ்வுலகம் வெகுதூரம் பயணித்து விடுகிறது
இருந்தாலும் நம் பயணம் தொடர்கிறது
நாம் விட்ட இடத்தில் இருந்து
அதனால்தான் என்னவோ
எப்போதும் ஓர் இடைவெளி இருக்கிறது
இவ்வுலகிற்கும் நமக்கும்
அதை நிரப்பவே தொடர்கிறது
வாழ்க்கை பயணம்!

Wednesday, September 17, 2014

யுத்தம் நடைபெறுகிறது

யுத்தம் நடைபெறுகிறது
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணித்துளியும்
எதிரிகள் யாருமில்லை
மனசுக்குள்ளேயே!

Tuesday, September 16, 2014

ஓட்டம்

 ஓட்டம்
நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
இலக்குகள் நிர்ணய க்கப்படாத  ஓட்டம்
இது ஒரு வழிப்பாதை
இதன் பேர் வாழ்க்கை!